இந்த வாரம் OTT இல் வெளியாகும் 7 படங்கள்.. எந்தெந்த திரைபடம் எதில் தெரியுமா?

This Week Ott Release Movies List: ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து ஓடிடியில் ஏராளமான திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் முன்னணி நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திரையரங்களில் கிடைக்கும் வரவேற்பு அளவிற்கு ஓடிடியிலும் கிடைத்து வருவதனால் ஓடிடி படங்களுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். அப்படி இந்த வாரம் ஓடிடியில் தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

மலைக்கோட்டை வாலிபன்: மோகன்லால் மற்றும் சோனாலி குல்கர்னி இணைந்து நடித்திருக்கும் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது.

என்ன மனோஜ் இந்த வேலையும் போச்சா.. அண்ணாமலை வீட்டிற்கு வந்த மீனாவின் அம்மா தங்கை.. பேசக்கூடாத வார்த்தையை பேசிய விஜயா…

போச்சர்: நிமிஷம் சஜயன், திபியேந்தி மற்றும் ரோஷன் மேத்தியோ ஆகியோர்கள் இணைந்து நடித்திருக்கும் போச்சர் படம் காடுகளில் உள்ள விலங்குகளை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்த படம் அமேசான் பிரைமில் வருகின்ற 23ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர்: கோர்டன் கார்மியர், டல்லாஸ் லியு, இயன் ஓஸ்ஸி, பால் சன் ஹியுங் லீ மற்றும் கியாவென்டியோ ஆகியூர் போன்றோர்கள் இணைந்து நடித்திருக்கும் அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் திரைப்படம் பிப்ரவரி 22ஆம் தேதி நெட்லிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பார்ட்மெண்ட் 404: ஜென்னி, யூ ஜே-சுக், சா டே-ஹ்யூ இணைந்து நடித்துள்ள இப்படம் அமேசான் பிரைமில் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகிறது.

பவர் புக் |||: பாட்டினா மில்லர், மால்கம் எம். மேஸ்  போன்றவர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும்பவர் புக் ||| படம் பிப்ரவரி 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

வத்தி வச்ச மீனாவின் அம்மா.. முத்துவை விசாரிக்கப் போகும் அண்ணாமலை வெடிக்குமா பூகம்பம்..

சா எக்ஸ்: புற்றுநோய் அதிசய சிகிச்சை மேற்கொள்ளும் கதையை வைத்து உருவாகி இருக்கும் இந்த படமும் பிப்ரவரி 23ஆம் தேதி லயன்ஸ்கேட் பிளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தி இந்திராணி முகர்ஜி ஸ்டோரி: இந்திராணி முகர்ஜி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் பிப்ரவரி 23ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.