விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கப்பட்டது வழக்கம் போல உலகநாயகன் கமலஹாசன் இந்த சீசனையும் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் 6 வது சீசன் தொடங்கப்பட்டு தற்பொழுது 70 நாட்களுக்கு மேல் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இதில் காமெடி நடிகர் ஜிபி முத்து மட்டும் தனது சொந்த காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் மற்றவர்கள் அனைவரும் வார வாரம் வைக்கப்படும் எலிமினேஷன் ரவுண்டில் ஒவ்வொருவராக வெளியேறினர்.
கடைசியாக பிக் பாஸ் வீட்டை விட்டு தனலட்சுமி வெளியேறிய நிலையில் இந்த வாரமும் எலிமினேஷன் ரவுண்ட் வைக்கப்பட்டுள்ளது இதில் நாமினேஷன் ஆனது ஷிவின், அசீம், விக்ரமன், அமுதாவாணன், கதிரவன், மைனா, ஏடிகே, மணிகண்டன் ஆகியவர்கள். தற்பொழுது நாட்கள் போக போக ஓட்டுக்கள் போட்ட வண்ணமே இருக்கின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் குறைந்த ஓட்டுகளில் இருப்பவர் இரண்டு பேர் தான். அதில் கடைசி இடத்தை பிடித்திருப்பவர் மணிகண்டன் அதற்கு முன்பு இருக்கும் இடத்தை தக்க வைத்துள்ளார் ஏ டி கே இந்த இரண்டு பேர்களில் யாரேனும் ஒருவர் தான் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகை செம்ம அதிர்ச்சியில் இருக்கிறாராம் அந்த நடிகை வேறு யாரும் அல்ல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் ஏனென்றால் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் தான் மணிகண்டன். தற்பொழுது அவர் தான் குறைந்த ஓட்டுகளை வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..