கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு நடிகர் ஹரி வைரவன் நம்மை விட்டு மறைந்தது பலருக்கும் சோகம் அளிக்கிறது. இந்த நிலையில் அவருடைய இறப்பை வைத்து பப்ளிசிட்டி செய்த பிரபலங்களை விமர்சனங்களின் மூலம் திட்டி தீர்த்தார்கள். இந்த நிலையில் ஹரி பைரவனின் இறப்பை தாங்க முடியாத விஷ்ணு விஷால் அவருடைய மகளின் கல்வி செலவை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
ஹரி வைரவனும் விஷ்ணு விஷாலும் வெண்ணிலா கபடி குழு மற்றும் குள்ளநரி கூட்டம் ஆகிய இரண்டு திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த ஹரி வைரவன் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலர் அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென பிரார்த்தனை செய்து உள்ளார்கள் அதேபோல் ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளிப்படுத்தி இருந்தார்கள். அது மட்டுமல்லாமல் ஹரி வைரவனின் இறப்பை வைத்து சில பிரபலங்கள் பப்ளிசிட்டியும் தேடிக் கொண்டார்கள்.
அந்த வகையில் நடிகர் சூரி தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர் அவர் உடல்நிலை சரியில்லாத போது வராத சூரி அண்ணா இறந்ததற்கு அப்புறம் வந்து என்ன பிரயோஜனம் என்று விமர்சித்து இருக்கிறார். இவர்களுடைய அந்த பதிவு செம வைரல் ஆனது.
இதனைத் தொடர்ந்து ஹரி வைரவனின் இறப்பிற்காக அவருடைய மனைவிக்கும் குழந்தைக்கும் திரையுலகினர் உதவ வேண்டும் என நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ஹரி வைரவனின் குழந்தையின் கல்வி செலவை முழுமையாக தான் ஏற்றுக் கொள்வதாக முன் வந்திருக்கிறார்.
கட்டா குஷ்தி படத்தின் ரிலீசுக்கு பின் திரையரங்குகளில் விசிட் அடித்த விஷ்ணு விஷால் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார் அப்போது ஹரி வைரவன் பற்றி கேட்டபோது அதற்கு பதில் அளித்த விஷ்ணு விஷால் கடைசி ஆறு மாதங்களாக என்னால் முடிந்த உதவியை நான் செய்தேன் அதுமட்டுமல்லாமல் அவருடன் கடந்த ஆறு மாதங்களாக தொடர்பில் தான் இருந்தேன் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஹரிவைரவனின் மனைவியை பார்த்து அவரிடம் பேசினேன் உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் என்னிடம் சொல்லுங்கள் நான் செய்கிறேன் அதுமட்டுமல்லாமல் உங்களுடைய குழந்தையின் படிப்பு செலவையும் முழுமையாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் ஹரி வைரவன் கடைசியாக பேசிய வாய்ஸ் மெசேஜ் என்னிடம் உள்ளது என்று எமோஷனலாக பேசியுள்ளார் விஷ்ணு விஷால்.