சமீபகாலமாக உண்மையை தழுவிய படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது அந்த வகையில் நடிகர் சூர்யா சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் அப்படி தான் இருந்து வந்துள்ளன. சூரரைப் போற்று திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அண்மையில் நடித்த திரைப்படம் ஜெய் பீம் இந்த திரைப்படமும் பல்வேறு தடைகளைத் தாண்டி கடந்த தீபாவளியன்று OTT தளத்தில் வெளியாகியது.
இந்த படம் ஒரு உண்மையை தழுவி எடுக்கப்பட்ட படம். ஜெய் பீம் படம் OTT தளத்தில் வெளியாகி இருந்தாலும் நல்ல வரவேற்பையே படம் பெற்றது இருந்ததால் மக்கள் கூட்டம் பார்த்து கண்டு களித்தனர் மேலும் சூர்யாவின் கேரியரில் இந்தப்படம் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக இது அமைந்துள்ளது ஏனென்றால் படம் விறுவிறுப்பாக மக்களை பார்க்க வைத்ததோடு மட்டுமல்லாமல் கடைசியில் அழவைத்து விட்டது அந்த அளவிற்கு படம் சிறப்பாக இருந்தது.
இந்த திரைப்படத்தை விறுவிறுப்பாக அதேசமயம் ரசிக்கும் படியும் எடுத்திருந்தார் டிஜே ஞானவேல். மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் கை கோர்த்து கே மணிகண்டன், ரஜிஷா விஜயன், ரமேஷ், பிரகாஷ்ராஜ், ரோஸ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார் மேலும் கொடுக்கப்பட்ட குணச்சித்திர நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர் இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது.
படத்தை பார்த்த சினிமா பிரபலங்களும் நல்ல கருத்துகளை கொடுத்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படம் குறித்து தற்போது சூப்பர் தகவல் ஒன்று உலா வருகிறது அதன்படி பார்க்கையில் ஜெய்பீம் திரைப்படத்தில் முதன் முதலில் நடிகை இருந்தது வேறு ஒருவர் தான் சூர்யாவுக்கு முதலில் கெஸ்ட் ரோல் கொடுக்கத்தான் அழகு பார்த்தாம்.
மேலும் தயாரிக்க சூர்யாவும் முனைப்பு காட்டினார் ஆனால் படத்தின் கதையை சிறப்பாக இருந்ததை எடுத்து ஒருகட்டத்தில் சூர்யா நடிக்க முன்வந்தாராம். முதலில் ஜெய்பீம் திரைப்படத்தில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி தானாம். இதை அறிந்த ரசிகர்கள் நல்லவேளை அவர் நடிக்கில்லை அதுவரைக்கும் சந்தோஷம் தான் என கூறிய சூர்யா ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.