விஜயின் “சுறா” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோ தானாம் – அவரே சொன்ன உண்மை தகவல்.!

simbu

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவர் அண்மைக்காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறி வருகின்றன இதனால் அவரது சினிமா மார்க்கெட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்பொழுது கூட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் கைகோர்த்து சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம். நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. இதனால் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்தும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் உலக அளவில் கிட்டத்தட்ட 15 கோடி வசூலித்திற்கும் என சொல்லப்படுகிறது. அடுத்த அடுத்த நாட்களில் வெந்து தணிந்தது காடு படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிம்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை கூறியுள்ளார் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு முன்பாகவே கௌதம் மேனன் சிம்புவிற்கு ஆக்சன் கதைகளில் சுறா என்னும் தலைப்பில் ஒரு படத்தை உருவாக்க இருந்தாராம் ஆனால் அப்பொழுது சிம்பு காதல் கதை களத்தில் ஒரு படம் பண்ண வேண்டும் என நினைத்தாராம்.

அதனால் “சுறா” தலைப்பில் உருவான கதையை ஒதுக்கி வைத்து விட்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை கௌதம் மேனன் இயக்கியதாக நடிகர் சிம்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக போட்டு உடைத்து உள்ளார். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.