விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோ தானாம் – வியப்பில் ரசிகர்கள்.!

mamanithan

நடிகர் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு பீட்சா, சூது கவ்வும், தர்மதுரை போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் மக்கள் செல்வனாக இடம்பிடித்தார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி ஹீரோ கதாபாத்திரத்தையும் தாண்டி வில்லன் குல சித்திர கதாபாத்திரம் போன்ற அனைத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் நடித்து வந்தார்.

அந்த வகையில் விக்ரம் வேதா, மாஸ்டர் போன்ற படங்களில் டாப் நடிகர்களுக்கு நிகராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இந்த படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு காத்து வாக்குல ரெண்டு காதல் விக்ரம் போன்ற இரு படங்கள் இவர் நடிப்பில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் ஹீரோவாகவும் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த வாரம் மாமனிதன் என்ற படம் வெளியாகியது.

இந்த படமும் விஜய் சேதுபதிக்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றன. இந்தநிலையில் மாமனிதன் படத்திற்காக இயக்குனர் சீனுராமசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பல சுவாரஸ்ய தகவல்களை இயக்குனர் சீனு ராமசாமி பகிர்ந்து கொண்டார்.

ajith
ajith

அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சீனு ராமசாமியிடம் விஜய் சேதுபதிக்கு பதிலாக இந்த திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தால் யார் நடித்திருப்பார் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீனு ராமசாமி நான் முதலில் இந்த கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தேன் ஆனால் அது நடக்கவில்லை என்று கூறினார்.