பரத் நடித்த “காதல்” படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோ தானாம்.! பல வருடம் கழித்து வெளிவரும் உண்மை.

kadhal
kadhal

சினிமா உலகில் முன்னேற விரும்பும் நடிகர், நடிகைகள் பலரும் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில சிறப்பம்சங்களை தவறி விடுவதால் அவரது கேரியரில் மாற்றிவிடும். அந்தவகையில் 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோ கதாபாத்திரத்தில் பல பேரை நடிக்க வைக்க  படக்குழு அணுகியது.

ஆனால் படத்தின் கதையை முழுவதும் கேட்டிருந்தாலும் என்ன காரணமோ என்னவோ அந்த கதையில் நடிக்க வில்லை. தற்பொழுது நினைத்திருப்பார்கள் காதல் படத்தில் நாம் நடித்து இருந்தால் நமது கேரியர் மாறி இருக்கும் என்று. காதல் படத்தில் பரத் மற்றும் சந்தியா ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்னாக நடித்து இருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த தோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு இன்றும் பிடித்த படமாக இருந்து வருகிறது. இந்த படத்தின் மூலம் ஹீரோ ஹீரோயின் இருவருமே சினிமாவில் பல்வேறு பட வாய்ப்பை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக பல பேர் நடிக்க வரவில்லை தகவல் வெளியாகி உள்ளது அவர்கள் யார் யார் என்பதை தற்போது பார்போம். பரத் வேடத்தில் முதல் முதலில் நடிக்க தேர்வானவர் முதலில் தனுஷ் தானாம்.

ஆனால் அவர் அந்த வாய்ப்பை நழுவவிட பிறகு பாக்கியராஜ் மகன் சாந்தனுவுக்கு சென்றது அவர் படத்தின் கதையை எல்லாம் கேட்டுவிட்டு படத்தில் நடிக்க வில்லை. ஒருவழியாக படக்குழு சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை யாரும்  சரியாக ஒத்துழைக்காததால் கடைசியில் ஒருவழியாக நடிகர் பரத் தேர்வாகி நடித்தாராம்.