தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.
இதனை தொடர்ந்து லியோ படத்தில் இரண்டு நடிகர்களின் காட்சி படமாக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மிஸ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அவர்களே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கு உதயநிதியால் பெரிய சிக்கல் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது நடிகர் விஜய் அவர்கள் கடைசியாக நடித்த படம் வாரிசு இந்த படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்ற முயற்சி செய்தது.
ஆனால் விஜய் அவர்கள் இதை தடுத்து இருக்கிறார் அதன் பிறகு வாரிசு படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ஒரு சில பகுதிகளில் மட்டும் வாங்கி இருந்தது. ஆனால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை முழுமையாக கைப்பற்றி இருந்தது.
இதை தொடர்ந்து அஜித்தின் துணிவு திரைப்படமும் விஜயின் வாரிசு திரைப்படமும் நேரடியாக திரையரங்கில் ஒரே நாளில் மோதிக்கொண்டது. இதுவரைக்கும் வசூல்ராஜா என்ற பெயரை எடுத்து வந்த விஜய் வாரிசு படத்தில் அது தலைகீழாக மாறியது.
அதன் பிறகு தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்தத் திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது இதனை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்தையும் விஜயின் லியோ திரைப்படத்தையும் ஒரே நாளில் வெளியிட ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தற்போது திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாரிசு படத்தை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் லியோ படத்தை கைப்பற்றி விடலாம் என்ற முயற்சி எடுத்தது ரெட் ஜெயின்ட் நிறுவனம் ஆனால் அதுவும் கையை மீறி போனது அதன் பிறகு ஏகே 62 திரைப்படத்தை தற்போது கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது இந்த நிலையில் லியோ திரைப்படத்துடன் ஏகே 62 திரைப்படத்தை மறுபடியும் மோத வைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் மறுபடியும் விஜயின் வசூலுக்கு ஆப்பு வந்து விடுமோ என்று எண்ணி லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக முடிக்க வேண்டும் என்று விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது லியோ திரைப்படத்தின் படபிடிப்பு மிக விறுவிறுபாக நடைபெற்று வரும் நிலையில் ஏகே 62 படத்தின் படபிடிப்பு இன்னும் தொடங்கபடாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.