துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக நடிகர் அஜித் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டார் என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது உருவாகி வரும் ஏகே 62 திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ஏனென்றால் இதுவரைக்கும் காதல் கமர்சியல் திரைப்படத்தை கொடுத்து வந்த விக்னேஷ்வரன் நடிகர் அஜித்தை வைத்து ஒரு மாஸ் திரைப்படத்தை எப்படி கொடுப்பார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது. ஏகே 62 திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏகே 63 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஏகே 63 திரைப்படம் எல்சியு-வில் இணையும் என்று கூறப்படுகிறது அந்த வகையில் ஏற்கனவே LCU-வில் கைதி, விக்ரம், திரைப்படங்கள் இடம் பெற்று இருக்கும் நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படமும் இணைய இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ஏகே 63 திரைப்படம் எல்சியு-வில் இணைந்தால் ஒரு கேங் வார் நடக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அதுமட்டுமல்லாமல் ஏகே 63 இல் அஜித்திற்கு தம்பியாக விஜய் மற்றும் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது அதாவது தளபதி 67 திரைப்படத்தின் தொடர் கதையாக தான் ஏகே 63 இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா மாஃபியா கேங்கின் தலைவராக இருந்திருப்பார் அதேபோல நடிகர் விஜய் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியவில்லை ஆனால் அதே கதாபாத்திரத்தில் தான் ஏகே 63 திரைப்படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் ஏகே 63 திரைப்படத்தில் சூர்யா, அஜித், விஜய், மூவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்று பெரிய உருட்டு ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் இது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு பேட்டியிலும் கூறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வதந்தியாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இப்படி நடந்தால் எல்சியு-வில் ஒரு கேங் வார் நடக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.