இந்த முறையும் CSK அணி கோப்பையை வெல்லாது.. அந்த இளம் அணி தான் ஜெயிக்கும்.. முன்னாள் பேகப்பந்து பேச்சாளர் கணிப்பு

csk
csk

கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் வருட வருடம் உள்ளூர் T20 போட்டி நடத்தி வருகிறது அந்த வகையில் இந்தியாவில் ஐபிஎல் போட்டி சீசன் சீசன்னாக நடத்தி வருகிறது. அதன் படி ஐபிஎல் 16 வது சீசன் மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது மொத்தம் 10 அணிகள் விளையாட இருக்கிறது.

இதில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணி அடுத்த இடத்திற்கு நகரும்.. ஐபிஎல் 16வது சீசன் தொடங்க இன்னும் விரல் விட்டு என்னும் அளவிற்கத் தான் நாட்களில் இருப்பதால் ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது இந்த தடவை சிஎஸ்கே, மும்பை போன்ற அணிகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் என கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஒரு சிலர் இப்பொழுதும் கோப்பையை வாங்காத ஒரு புதிய அணி தான் கோப்பையை கைப்பற்றும் என தனது கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர் இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்..  இந்த முறை எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது குறித்து சமீபத்திய ஒன்றில் கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்..

நிச்சயமாக CSK அணி 2023 ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று எனக்கு தோன்றவில்லை. இந்த தொடரில் கேரளாவை சேர்ந்த ஒருவர் மட்டுமே கேப்டனாக செயல்படுகிறார் எனவே சஞ்சீவ் சாம்சன் தலைமை தாங்கும் ராஜஸ்தானிக்கு தான் ஆதரவு கொடுப்பேன் ஆனால் இந்த சீசனில் ஒரு புதிய அணி கோப்பையை வெல்வதை பார்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கும் என கூறினார்.

குறிப்பாக 2023 ஐபிஎல் கோப்பை பெங்களூரு வென்றால் அது மிகச் சிறப்பாக இருக்கும் ஏனென்றால் விராட் கோலி  இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய பங்காற்றி உள்ளார் எனவே கோலி விளையாடும் ஆர்சி அணி கோப்பையை வென்றால் மிகச் சிறப்பாக அமையும் என கூறி உள்ளார் இதோ ஸ்ரீசாந்த் பேசிய அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.