வருடம் வருடம் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதன்படி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது ஆரம்பத்திலேயே ஒவ்வொரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பிளே ஆப் எந்த அணி நுழையும் என்பது யாராலும் கணிக்க முடியவில்லை..
ஒவ்வொரு போட்டி முடியும் இப்பொழுது அணிகள் மாறிக்கொண்டே இருந்தன கடைசியாக குஜராத், சென்னை, சூப்பர் கிங்ஸ், லக்னோ, மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் க்கு நுழைந்தன. குவாலிஃபயர் ஒன்னில் சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
இதில் சென்னை அணி வெற்றி பெற்று நேராக இறுதி போட்டிக்கு நுழைந்து விட்டது. நேற்று எலிமினேட்டர் ரவுண்டில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பல பலப்பரிட்சை நடத்தின இதில் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது நாளை குஜராத் அணியை எதிர்த்து பல பரீட்சை நடத்துகிறது.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணி உடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் சென்னை உடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோத வேண்டும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்ற வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் அதிரடி ஆட்டக்காரருமான பிராவோ பேட்டியில் கூறியுள்ளது.
என்னவென்றால் குஜராத் அணி கூட இறுதிப்போட்டிக்கு வரலாம் ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி வரக்கூடாது என்பது என்னுடைய கருத்தை எனக் கூறியிருக்கிறார். இதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் இப்பவே பயம் வந்திருச்சா என கூறினர். மேலும் கப்பு எங்களுக்கு தான் என சொல்லி கமெண்ட் அடித்து வருகிறனர்.