மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான “த்ரிஷ்யம்” படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. மேலும் மக்கள் அனைவரையும் கவர்ந்திழுத்தது. இந்த படத்தை ஜீத்து ஜோசப் என்பவர் இயக்கியிருந்தார்.
மேலும் சமிபத்தில் இரண்டாம் பாகமும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இந்த திரைப்படம் நேரடியாக ஊட்டி தளத்தில் வெளியானது இருப்பினும் மக்களின் ஆதரவு இந்த திரைப்படத்திற்கு கிடைத்து வருகிறது.
திரிஷ்யம் படத்தை தமிழில் “பாபநாசம்” என்ற பெயரில் இயக்கி இருந்தார் அதே ஜீத்து ஜோசப்.இந்த படத்தில் முதன் முதலில் தமிழில் தேர்வானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானாம்.
கதையை ரஜினியிடம் சொன்ன போது ரொம்ப பிடித்துப்போக ஒரு கட்டத்தில் அந்த கதையில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்ய சொன்னார்.
அது என்னவென்றால் அந்த கதையின் ஹீரோ போலீசாரிடம் அடி வாங்குவார் அந்த ரோலில் நான் நடித்தால் தனது ரசிகர்கள் எத்துக்கொள்ள மாட்டார்கள் என வெளிப்படையாக அவர் கூறினார்.
அதற்கு இயக்குனர் அதை மாற்றினால் கதையின் உண்மைத்தன்மையை மாறிவிடும் என கூறி அங்கிருந்து வெளியேறினார்.
பின் கமலை சந்தித்து படத்தின் கதையை கூறியுள்ளார் அப்பொழுது ஒரு காட்சியில் ஹீரோ போலீசாரிடம் அடிவாங்கும் காட்சிகள் இடம்பெறும் என குறிப்பிட்டு அதற்கு கமல் அது வாங்குனாலும் பரவாயில்லை நான் நடிக்கிறேன் என கூறினார்.
அதன் பிறகே படத்தில் கமிட்டாகி சிறப்பாக நடித்தார் படம் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது என குறிப்பிட்டார் இயக்குனர்.