பிரபல விஜய் டிவியில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக கொடிகட்டிப்பறந்த வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.அதோடு இவர் நடிப்பில் வெளிவரும் பெரும்பாலான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
இவர் தற்பொழுது டாக்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள். ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தியேட்டர்கள் மூடப்படள்ளது எனவே ஓடிடி வழியாக வெளியாகுமா என்று சரியாக தெரியவில்லை.
பொதுவாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களில் மற்ற காமெடி நடிகர்களும் ஒரு அளவிற்கு மிகவும் சூப்பராக நடித்திருப்பார்கள். அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இவருடன் நடித்த காமெடி நடிகர் பெரும் வறுமையில் வாடுகிறார் எனவே சிவகார்த்திகேயன் உதவி செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப் படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அத்திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதனைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரஜினி முருகன் இந்த திரைப்படமும் காமெடி கலந்து மிகவும் அருமையாக அமைந்தது.
இந்த இரண்டு திரைப்படங்களிலும் காமெடி நடிகராக இருந்தவர் தான் கந்தசாமி. இவர் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது. எனவே படப்பிடிப்பிற்கு செல்ல முடியாமல் கந்தசாமி சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்பட்டு வருவதாக கூறி உள்ளார். எனவே கந்தசாமிக்கு சிவகார்த்திகேயன் உதவி செய்வாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளார்கள்.