புகழின் உச்சத்தில் இருந்த அனுஷ்காவுக்கா இந்த நிலைமை.! அவரின் பரிதாபமான நிலை..

anushka

பொதுவாக சினிமாவில் நடிகர்கள் போல நடிகைகள் நீண்ட காலம் வரையிலும் முன்னணி நடிகையாக வர இயலாது. ஒரு நடிகர் தனது 60 வயது வரையும் கூட முன்னணி நடிகராக பல படங்களில் நடிக்கலாம். அதற்கு எடுத்துக்காட்டாக கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்த் அவர்களைக் கூறலாம். ஆனால் நடிகைகளுக்கு அப்படி கிடையாது அதிகபட்சமாக 35-லிருந்து 40 வயது வரையில் மட்டுமே முன்னணி நடிகையாக பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அவர்களின் இளமை குறைந்துவிட்டால் அவர்களின் மார்க்கெட்டிங்கும் குறைந்துவிடும்.

அந்த வகையில் ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் வந்தவர் நடிகை அனுஷ்கா. சமீபகாலமாக இவருக்கு பல சோதனைகள் நடந்து வருவதால் சினிமாவை விட்டு விடலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.

ஒரு பெண் மிகவும் அழகாக கொழுக்கு மொழுக்கு என்று இருந்தார் யாருக்கு தான் பிடிக்காது. அந்தவகையில் அனுஷ்கா மிகவும் அழகாக இருந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர்களும் என் படத்தில் அனுஷ்கா தான் எனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு அனுஷ்காவின் மீது ஜொல்லு விட்டார்கள். எனவே தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிலும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் முன்னணி நடிகர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் என்ன ஆனது என்று தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில் ஆர்யா மற்றும் அனுஷ்கா இணைந்து நடித்திருந்த இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் அனுஷ்கா தனது உடல் எடையை மிகவும் அதிகரித்ததால் பின்பு மற்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்தார்.

anush 1
anush 1

இவ்வாறு திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த இவர் தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதால் சினிமாவை விட்டு விட்டு குடும்ப வாழ்வில் கவனம் செலுத்தலாம் என்று நினைத்து வருகிறாராம்.

அதுமட்டுமல்லாமல் எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்று கூறி தனது நெருங்கிய வட்டாரங்களில் புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது. நான் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை புதுமுக நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று தெளிவாக கூறியுள்ளாராம்.