நடிகர் சூர்யா கடைசியாக நடித்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதனை தகவைத்துக் கொள்ள அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடனும் தற்பொழுது படம் பணி வருகிறார். அந்த வகையில் சூர்யா கையில் சூர்யா 42, வாடிவாசல் போன்ற படங்கள் இருக்கின்றன.
முதலாவதாக சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து சூர்யா 42 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரலில் முழுவதும் முடிந்து விடும் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாடிவாசல் திரைப்படம் பெரிய அளவில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது சூர்யாவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் ஒவ்வொருவருக்கும் சூர்யா நடித்த ஏதாவது ஒரு திரைப்படமோ அல்லது ஒரு சீன் இன்னமும் மறக்க முடியாத அளவிற்கு இருக்கும்.. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் அப்பா சிவக்குமாருக்கு சூர்யா நடித்த படத்தில் தனக்கு ரொம்பவும் பிடித்த சீன் எது என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்..
அதாவது நந்தா படத்தில் ஒரு சீனில் தனது தாய் சாப்பாட்டில் விஷம் வைத்துள்ளார் என்று தெரிந்தும் கண்ணில் நீர் கோக்க சிரிப்பார். சூர்யாவே இனி நினைத்தாலும் அப்படி நடிக்க முடியாது. இனி அவர் நிறைய படங்களில் நடித்தாலும்.. இது தான் எனக்கு எப்பொழுதும் பிடித்த ஒன்று என கூறியுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் நீங்கள் சொல்வது உண்மை நந்தா படத்தில் சூர்யா சூப்பராக நடித்து அசத்தி இருந்தார் எனக் கூறிய ரசிகர்கள் இந்த பதிவை இணையதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.