தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் ஹீரோயின், குணச்சத்திர கதாபாத்திரம் போன்றவற்றில் நடித்து ஓடிக் கொண்டிருப்பதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. மேலும் பட வாய்ப்புகள் ஏராளமாக கிடைக்கின்றன.
இதுவரை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் ரம்மி, திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை, செக்கச் சிவந்த வானம் என தொடர்ந்து பல படங்கள் வெற்றியை கண்டார் இப்பொழுதும் இவர்கள் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
இவரது மார்க்கெட் உயர உயர இவர் நடவடிக்கைகளும் சற்று மாறி இருக்கின்றன இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் மெல்ல மெல்ல பிடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர் காரணம் இவர் பெருமளவு சம்பளத்தை உயர்த்தாதது மேலும் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து ஓடுவதால் இவர் இவருக்கு மார்க்கெட் அதிகரிக்கிறது.
அதனால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர். பிரியா பவானி சங்கர் சந்தித்து கதை சொல்லும் வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுடன் ரொம்ப பணிவாக நடப்பதும் அவர்களுக்கு ரொம்ப பிடித்துள்ளதால் நடிகை பிரியா பவானி சங்கரை கமிட் செய்யவே ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறதாம்..
இப்படியே போனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட்டை வெகுவிரைவிலேயே முந்தி நடிகை ப்ரியா பவானி சங்கர் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என கோலிவுட் தரத்தில் ஒரு பேச்சுக்கள் அடிப்படுகின்றன.