தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த திரைப்படத்தை நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்கிறார் அதுமட்டுமில்லாமல் வினோத் தான் படத்தையும் இயக்குகிறார்.
படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் பயங்கர எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்தி கேயா நடித்துள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா அஜித்தின் வலிமை திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு தைரியம் கொடுத்த திரைப்படம் விஜய் திரைப்படம் தான் என ஓப்பனாக கூறியுள்ளார். அதாவது சமீபகாலமாக விஜயின் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் கொரோனா காலகட்டத்திலும் 50 சதவிகித இருக்கைகள் உடன் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதுமட்டுமில்லாமல் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. இது திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது அதேபோல் ஹீரோவுக்கு நிகரான வில்லன் கதாபாத்திரமும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. மாஸ்டர் திரைப்படத்தில் பவானி கதாபாத்திரம்தான் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
இந்த நிலையில் வலிமை திரைப்படத்தில் நடித்து வரும் கார்த்திகேயா வலிமை திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு மிகவும் தைரியம் கொடுத்த திரைப்படம் என்றால் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் அதுமட்டுமில்லாமல் நான் ஈ படத்தில் சுதீப் கதாபாத்திரமும் என குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் ஹீரோவுக்கு நிகரான வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இந்த இரண்டு திரைப்படங்களையும் முன்னோடியாக வைத்து தான் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறேன் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார்.
இந்தநிலையில் வலிமை திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என கார்த்திகேயா கூறியிருந்தார். மேலும் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே மாதம் அஜித் பிறந்தநாளில் என்பதை போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இதை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.