லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி அண்மையில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், செண்டிமெண்ட், திரில்லர் என அனைத்தும் கலந்த படமாக உருவாகியது. படத்தின் அனைத்து காட்சிகளும் மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் சிறப்பாக இருந்த காரணத்தினால் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக ரசிகர்களின் தாண்டி மக்கள் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக பார்த்து கொண்டாடி வருகின்றனர் அதன் காரணமாக விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை நடத்தி வருகிறது இதுவரை விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிச்சயம் 500 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனையை தமிழ் சினிமாவில் கமலின் விக்ரம் திரைப்படம் நிகழ்த்தும் என்பதே பலரின் கணிப்பாக இருக்கிறது. விக்ரம் படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா, நரேன் போன்றவர்களும் சூப்பராக நடித்து இருந்தனர்.
குறிப்பாக நடிகர் சூர்யா கடைசி காட்சியில் ரோலஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். ஆனால் படக்குழு முதலில் ரோலஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவை நடிக்க வைக்க தேர்வு செய்யவே இல்லை.. ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க பட குழு தேர்வு செய்ய இருந்தது மலையாள நடிகர் பிரித்திவிராஜ் தான் என கூறப்படுகிறது.
அவர் சில காரணங்களால் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போக கடைசி நேரத்தில் நடிகர் சூர்யாவை ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கமிட் செய்ததாக தகவல்கள் வெளி வருகின்றன. சூர்யாவும் கொடுக்கப்பட்ட ஐந்து நிமிட காட்சியிலும் பிரமாதமாக நடித்த அசத்தி மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதில் குடியேறினார்.