இயக்குனர் மகிழ்திருமேனி இதுவரை விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களை எடுத்திருக்கிறார். அந்த வகையில் தடையறத் தாக்க, தடம் போன்ற அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து உள்ளன. சமிபத்தில் கூட நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து கலகத் தலைவன் என்னும் படத்தை எடுத்திருந்தார்.
படம் சூப்பராக ஓடி வசூலில் பட்டையை கிளப்பியது அதனைத் தொடர்ந்து இயக்குனர் மகளிர் திருமேனி இயக்க உள்ள திரைப்படம் ஏகே 62 இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் 200 கோடி பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்த இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி தற்பொழுது பேட்டி ஒன்றில் சில தகவல்களை கொடுத்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ஆரம்பத்தில் செல்வராகவனின் உதவி இயக்குனராக மகிழ்திருமேனி இருந்து வந்துள்ளார் அப்பொழுது செல்வராகவன் தனுஷ் வைத்து பல படம் பண்ணி வந்தார்.
அதில் ஒன்று 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் காதல் கொண்டேன். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சோனியா அகர்வால், டேனியல் பாலாஜி, நாகேஷ் ஹேமலதா, சுதீப் மற்றும் பல திரை முன்னணி நடிகர், நடிகைகள் சூப்பராக நடித்த அசத்தியிருந்தனர். இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுசு கிடையாதாம்.
இந்த படத்தின் கதையை செல்வராகவன் நடிகர் முரளியை வைத்து எடுக்கத்தான் நினைத்தாராம் ஆனால் சில காரணங்களால் முரளியை விட்டு இந்த கதை நழுவது வேறு வழி இல்லாமல் தனுஷை வைத்து எடுத்தாராம். படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று அதிரி புதிரி ஹிட் அடித்தது என மகிழ் திருமேனி உண்மையை உடைத்துள்ளார்.