நடிகர் அஜித்குமார் ஹச். வினோத்துடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து தனது 61 வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து படம் உருவாகி உள்ளதால் துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் பிரபலங்களான சிபி, அமீர், பாவனி போன்றவர்களும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.
அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்திழுக்க படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது கடைசியாக வெளியான சில்லா சில்லா சிங்கிள் இணையதளத்தில் படும் வைரலாகி வருகிறது. துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் ஏகே 62 திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார்.
இந்த படத்தை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தான் எடுக்க உள்ளார். இந்த படத்தின் கதைக்கு ஏற்றபடி நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறார் முதலில் AK 62 படத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லி வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்தார் ஆனால் அது எடுபடவில்லை இதனால் தனுஷை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு..
முயற்சி செய்ய இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றன. இந்த நிலையில் ஒரு தகவல்.. நடிகர் தனுஷ் AK 62 திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவில்லை ஒரு சேமியா ரோலில் நடிக்க இருப்பதாகவும் ஒரு சில தகவல்கள் வெளி வருகின்றன பொறுத்திருந்து பார்ப்போம் கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் சொல்லும் தகவல் தான் இறுதியாக இருக்கும் என கூறப்படுகிறது.