அஜித்தால்தான் இதனை நடிகர்கள் வளர்ந்தார்களா.? விட்டு கொடுத்தவன் கெட்டுப்போனதில்லை.

ajith-tamil360newz

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். சமீபகாலமாக தல நடிக்கும் படங்கள் மாபெரும் ஹிட் அடித்து சாதனை படைத்து வருகிறது ஆனால் ஆரம்பத்தில் இவர் வெற்றி தோல்வி படங்களை கொடுத்துள்ளார் இருப்பினும் இவருக்காக பல இயக்குனர்கள் சிறந்த கதைகளை இயக்கி கதை கூறி உள்ளனர் ஆனால் அதுபோன்ற சமயத்தில் அஜித் அவர்கள் மருத்துவமனையில் அடிக்கடி உடல்நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டதால் ஒரு சில பட வாய்ப்புகளை இழக்க நேர்ந்தது மேலும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஒரு சில படங்களில் அவர் நடிக்க முடியாமல் போனது இதனை மற்ற நடிகர்கள் பயன்படுத்தி நடித்து பிரபலம் அடைவதோடு மட்டுமல்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கியுள்ளனர்.

சூர்யா நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த திரைப்படங்களான காக்க காக்க, கஜினி போன்ற படங்களில் முதலில் அஜித் அவர்கள் தான் நடிக்க இருந்தார். அதுபோல தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜீன்ஸ் திரைப்படம். இப்படத்தில் முதலில் அஜீத்தை தான் செய்தனர் இடையில் சில பிரச்சினைகள் காரணமாக படம் கைமாறியது.

இயக்குனர் பாலா முதலில் நந்தா படத்தில் இருக்கும்போது அஜித்தை மனதில் வைத்து தான் படத்தின் கதையை எழுதி உள்ளார் ஆனால் படத்தில் அஜித்திற்கு பதிலாக சூர்யா கமிட்டாகி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது நான் கடவுள் படத்தில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அஜீத் படத்திலிருந்து விலகினார். விஜய் சூர்யா நடித்த நேருக்கு நேர் இப்படத்தில் முதலில் அஜித் விஜய் ஆகியோர் முதலில் நடித்த சில காட்சிகள் எடுக்க பட்டன இருப்பினும் சில காரணங்களால் படத்திலிருந்து அஜித் விலகினார்அந்த கதாபாத்திரத்திற்கு சூரியா கமிட் ஆகி நடித்தார் இதுவே அவர் சினிமா உலகிற்கு வர வாய்ப்பாக அமைந்தது என சூர்யா பல மேடைகளில் கூறியுள்ளார்.

thala
thala

அத்தகைய மாபெரும் படங்களை தல அஜித் அவர்கள் மிஸ் பண்ணியதால் இன்றளவிலும் அவர் வருத்தப்பட்டு கிடையாது ஒரு படம் இன்னொரு படத்தை விட மிகச் சிறப்பாக அமைவது இயல்பு தான் பல வெற்றி படங்களை அவர் விட்டுக் கொடுத்தாலும் அதனை விட சிறந்த படங்களான வாலி ,காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்கள் இவரது இமேஜை வேற லெவலுக்கு எடுத்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மாபெரும் படத்தை இழந்துவிட்டோம் என வருத்தப்படுவதை விட அடுத்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதை மாபெரும் படமாக காட்ட வேண்டும் என்பதே தல அஜித்தின் மிகப்பெரிய நம்பிக்கை. இதனால் தான் அஜித் அந்த இடத்தில் உள்ளார். தல நீ எப்பொழுதும் மாஸ்…..வாழ்க பல்லாண்டு…..என போற்றும் ரசிகர்கள்