லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு நயன்தாரா நடித்த ஒவ்வொரு திரைப்படம் வெற்றி படமாக மாறியது. இதனால் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். திரை உலகில் சூப்பராக ஓடிக் கொண்டிருந்த.. இவர் நிஜ வாழ்க்கையில் மட்டும் பல சர்ச்சைகளில் சிக்கி சினாபினமானார்.
அதிலிருந்து வெளிவர திருமணம் ஒன்றுதான் வழி என்பதை தெரிந்து கொண்டு ஒரு வழியாக விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு நயன்தாரா குடும்பம் – சினிமா என இரண்டிற்கும் நேரத்தை ஒதுக்கி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கின்ற நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படம்.
வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது அதற்கு முன்பாக ஸ்பெஷல் ஷோ ஒன்று போடப்பட்டது. அப்போது தனது கணவருடன் சென்று படத்தை பார்த்துவிட்டு வந்தார். அதன் புகைப்படங்களும் வேற லெவலில் வைரலாகின. அதனை தொடர்ந்து நயன்தாரா கனெக்ட் படத்தின் ப்ரமோஷன் கலந்து கொண்டார்.
அப்பொழுது சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது என்னவென்றால்.. நான் சினிமாவில் நுழைந்த நேரத்தில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படங்கள் வெளியாக வில்லை பட விழாக்களாக இருந்தாலும் நாயகிகளை ஒரு ஓரமாக நிற்க வைத்து விடுவார்கள்.
ஹீரோயின்களுக்கு பெரிய அளவில் மதிப்பு இருக்காது ஹீரோயின்களை பற்றி அதிகமாக பேச மாட்டாங்க.. அதனால் தான் பட விழாவுக்கு செல்வதை தவிர்க்க ஆரம்பித்தேன் ஆனால் இப்பொழுது அப்படி இல்லை நாயகிகளை வைத்து படம் தயாரிப்பாளர்கள் முன் வந்து விட்டார்கள் என கூறினார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் ஊலா வந்து கொண்டிருக்கிறது.