ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பிஇல் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிய புதிய சீரியல் என ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலுக்கு ரசிகர் பட்டாலும் ஏராளம்.
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் எத்தனை சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதேபோல் அந்த சீரியலில் உள்ள கதாபாத்திரத்தை தங்கள் வீட்டில் இருக்கும் நபர்களைப் போல் ரசித்து ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் முதன் முதலில் சித்ரா நடித்து வந்தார்.
இவர் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானார் ஆனால் 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு இவர் கதாபாத்திரத்தில் யாரை போட்டாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது பின்பு காவியா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார் ஆரம்பத்தில் சில விமர்சனங்கள் இருந்தாலும் போகப்போக இவரை முல்லையாக ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த நிலையில் அப்பொழுது காவியா திடீரென பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விளகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அவருக்கு பதிலாக தற்பொழுது சிற்பிக்குள் முத்து என்ற தொடரில் நடித்து வந்த லாவண்யா புதிய முல்லையாக நடித்து வருகிறார். ஆனால் கவியா எதற்காக முல்லை கதாபாத்திரத்தில் இருந்து விலகினார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்தது.
இதனால் தற்பொழுது காவியா முல்லை கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதற்கான காரணம் கிடைத்துள்ளது அதாவது காவியா தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அதனால்தான் இந்த முடிவை எடுத்து இருப்பார் என கூறப்படுகிறது.