தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இது தமிழில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் கடந்த வாரம் முதல் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
கமலஹாசன் அவர்களின் தொகுப்பில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை 20 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இதன் காரணத்தினால் இவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது மேலும் இந்த வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் நானா நீயா என அடித்துக் கொள்ளாத அளவிற்கு சண்டை போட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியின் 21 போட்டியாளர்களில் ஒருவர் தான் ரக்சிதா மகாலட்சுமி. இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய கணவர் பிரிந்து வாழ்வதற்கான காரணத்தை கூறியுள்ள நிலையில் இந்த காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள்.
ரக்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் அதன் பிறகு தொடர்ந்து ஏராளமான சீரியல்களின் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார். மேலும் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளாகவும் இருந்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலின் மூலம் அறிமுகமான தினேஷை காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து இருவரும் சீரியல்களில் நடித்து வந்தார்கள் அதிலும் முக்கியமாக ரக்சிதா, தினேஷ் இருவரும் இணைந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் சீரியலில் நடித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் திடீரென ரக்சிதா தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது மேலும் இது குறித்து இருவருமே எந்த ஒரு தகவலம் வெளியிடவில்லை.
ஆனால் முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரக்சிதா கூறியுள்ளார் அதில் அவர் கூறியதாவது திருமணமாகி 9 வருடங்களாகியும் ரக்சிதா குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் தான் தினேஷுக்கு மனவருத்தம் என்றும் அதனால் தான் இருவரும் தற்பொழுது பிரிந்து வாழ்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ரக்சிதா குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுவதுமாக ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்களாம் ஆனால் சீரியல்களில் நடிப்பதை தன்னால் நிறுத்த முடியவில்லை என்று ரக்சிதா கூறியதால் தான் அவருக்கும் இவருடைய கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அவரே இந்நிகழ்ச்சியின் மூலம் கூறியுள்ளார்.