உலக நாயகன் என்ற பட்டத்தோடு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன் இவரது சினிமா பயணத்தில் நிறைய திரைப்படங்கள் நடித்து ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்து பின்பு ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வந்தார்.
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ்4 சீசன் வரை இவர் தொகுத்து வழங்கி வந்தார்.
மேலும் கமல்ஹாசன் மக்கள் நீதி மைய்யம் என்ற கட்சியைத் தொடங்கி உள்ளார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இந்நிலையில் முதன்முதலாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் இவர் போட்டியிடுவதற்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
எல்லாக் கட்சியும் எதிர்த்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் மைய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்கு சென்று உள்ளாராம்.
அந்த பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன் நான் சினிமா துறையில் இருந்து தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததால் எனக்கு 300 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளாராம்.
மேலும் அந்த 300 கோடி எனக்கு ஒன்றும் கவலை இல்லை எனவும் தமிழக மக்கள் நலன் மட்டுமே போதும் எனவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.அதோடு ஊழல் செய்த பல முக்கிய நபர்கள் சிறையில் இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஷாப்பிங் போகிற அளவுக்கு நமது சட்டம் இருக்கிறது என கூறி இருக்கிறாராம்.
இதனையடுத்து இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தான் கூற வேண்டும்.