இதனால்தான் பார்த்திபனை விட்டு விலகினேன்.! பல வருடம் கழித்து உண்மையான காரணத்தை கூறிய சீதா..

Parthiban-seetha
Parthiban-seetha

நடிகை சீதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து கொண்டிருக்கிறார் படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களையும் பிசியாக இருந்து வரும் நடிகை சீதா தற்போது தன்னுடைய விவாகரத்து பற்றி ஒரு சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.

நடிகை சீதாவின் முதல் கணவரான நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் அவர்களுக்கும் தனக்கும் எதனால் விவாகரத்து ஆனது என்று முதன்முறையாக மீடியாவில் வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை சீதா.

மேலும் நடிகை சீதாவை ஆன்பாவம் திரைப்படத்திற்காக தேர்வு செய்தார் பாண்டியராஜன் அவர்கள். சூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சீதா அவர்கள் பாண்டியராஜன் இடம் கரடு முரடாக நடந்து கொண்டதாகவும் அதன் பிறகு படம் முடிந்தவுடன் அவரிடம் மன்னிப்பு கேட்டு உள்ளாராம்.

நடிப்பதற்கு துளியும் ஆர்வம் இல்லாத நடிகை சீதாவிற்கு ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் புதிய பாதையை அமைத்துக் கொடுத்துள்ளார் இயக்குனர் பாண்டியராஜன் அதன் பிறகு புதிய பாதை திரைப்படத்திற்கு பின்னர் அனைவராலும் அறியப்பட்டார். சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

மேலும் 90களில் உள்ள முன்னணி நடிகர்களில் படங்களில் அவர்களுக்கு ஜோடியாகவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதியபாதை திரைப்படத்தில் பணி புரியும் போது நடிகர் பார்த்திபன் அவர்களுக்கும் சீதா அவர்களுக்கும் காதல் மலர்ந்தது அதன் பின்னரே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமா வட்டாரத்தில் சிறந்த தம்பதியினராக இருந்தார்கள் அனால் திடீரென இவர்கள் இருவரும் விவாகரத்து அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளனர். அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு நடிகை சீதா அவர்கள் சதீஷ் என்கிற டெலிவிஷன் நடிகரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் நீடிக்கவில்லை 2016 ஆம் ஆண்டு இவர்களுக்கு இடையே விவகாரத்தை ஆனது.

ஆனால் நடிகர் பார்த்திபன் இதுவரைக்கும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட அவர்களுக்கு பிறந்த ஒரு பெண்ணின் திருமணத்தை இருவரும் நடத்தி வைத்தார்கள் அந்த சமயம் சீதா கொடுத்துள்ள ஒரு பேட்டியில் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் வரும் அருக்காணி கதாபாத்திரம் போல எனக்கு ஒன்றுமே  தெரியாமல் நான் வளர்ந்தேன் என்னிடம் இருந்து எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது எனக்கான நேரம் ஒதுக்க வேண்டும் என்பதற்காக விவாகரத்து செய்துள்ளேன் என்று பேட்டியில் சீதா கூறியுள்ளார்.