தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை மன்னர்கள் தனது திறமையைக் வெளிகாட்டி சினிமா உலகில் பயணித்து வருகின்றனர் அந்த வகையில் பலர் வந்து போயுள்ளனர் ஆனால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்கள் வெகு சிலரே அதில் முதன்மையானவர் கவுண்டமணி. ஆரம்பத்தில் நாடக மேடையில் தனது காமெடி பயணத்தை தொடங்கினார் அதன் பின் சினிமாவில் மெல்ல மெல்ல ஊடுருவ தொடங்கினார் ஆரம்பத்தில் தனி ஒருவனாக காமெடியில் கலக்கி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.
கவுண்டமணியை தனித்தனி தத்துவமான காமெடியை வெளிப்படுத்தி தன்னை பிரபலப்படுத்தி கொண்டு வந்தாலும் மேலும் பிரபலப்படுத்த உறுதுணையாக அமைந்த மற்றொரு காமெடி நடிகர் செந்தில் என்பது மறுக்க முடியாத உண்மை செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் இவர்கள் இருவரும் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் நல்லதொரு வசூல் சாதனையையும் படைத்தன. இவர் நடிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் தனக்கென ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக்கொண்டார் இவர் இது வரையிலும் சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கவுண்டமணி சினிமா துறையில் காமெடியனாக மட்டும் பணியாற்றாமல் ஹீரோ வில்லன் குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இன்று மே 25 தினத்தை முன்னிட்டு அவர் தனது 81 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.தல அஜித் அவர்கள் தற்பொழுது நற்பணி மன்றம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை மற்றும் பேட்டி கொடுப்பது இல்லை இதை போல அவர் கவுண்டமணி அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இதனை செய்து காட்டினர் சினிமா உலகிற்கு என்பது மறுக்க முடியாத உண்மை இவர் 2.6.1996 ஆம் ஆண்டு பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறியது.
ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த கவுண்டமணி ஒரு சின்ன கதையின் மூலம் அதை மக்களுக்கு உணர்த்தினார். பெட்டிக்கடையில் பீடியை கூட கட்டுக்கட்டாக உள்ளதான் வச்சிருப்பான் அப்போது தான் அதுக்கு மரியாதை அதையே வெளியே கொட்டி பார்த்து வைத்து வியாபாரம் பண்ணி பாருங்க பிடி விற்க்காது. நான் விழாக்கள் பேட்டிகள் கொடுப்பதில்லை கலை நிகழ்ச்சி என்ற பெயரில் சிங்கப்பூர் துபாய் போனதில்ல ரசிகர் மன்றங்களை கூட கலெகிட்டே என் பிறந்தநாள் என்னன்னே மறந்துபோச்சு. தேவா டிவிக்கு பேட்டி கொடுக்கிறதில்லை கவுண்டமணி சினிமாவில் மட்டும் பாரு அப்பதான் செம கிக்கா இருக்கும் என கூறியுள்ளார்.