இதனால்தான் வாரிசு படத்தில் நடித்தேன்.! சர்ச்சை நடிகை கொடுத்த பேட்டியால் வியந்து போன ரசிகர்கள்…

varisu
varisu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் உடனே இணைந்து ராஷ்மிக மந்தன்னா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஷாம், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் இந்த புகைபடம் தற்போது இணையத்தில் வைரலாகி வருக்றது. இந்த நிலையில் வாரிசு படத்தில் நடித்ததற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு ஊடக பேட்டி ஒன்றை கொடுத்து வருகிறார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் நீங்கள் தான் இந்த படத்தில் அதிக காட்சியில் நடிக்கவில்லையே எதற்காக நடித்தீர்கள் என்று கேட்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஒரு சில காட்சிகள் மட்டும் நடித்ததற்கு நீங்கள் நடிக்காமலே இருந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த ராஷ்மிகா மந்தானா எனக்கு தெரியும் இதில் ஒரு சில காட்சிகள் மட்டும் தான் நான் வந்திருப்பேன் அது மட்டுமல்லாமல் இரண்டு பாடல்கள் மூன்று காட்சிகள் மட்டும்தான் நடித்திருக்கிறேன் இருந்தாலும் வாரிசு படத்தில் நடித்தது ஏன் என்றால் தளபதி விஜய்க்காக தான் வாரிசு படத்தில் நடித்தேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் நான் விஜயின் தீவிர ரசிகையும் கூட. அது மட்டுமல்லாமல் விஜயுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று என்னுடைய பல நாள் ஆசை அது இன்று நிறைவேறி விட்டது என்று கூறியுள்ளார். இவர் இப்படி எதையும் மறைக்காமல் ஓப்பனாக பேசி விடுவதால்தான் பலரும் இவரை சர்ச்சை நடிகை என்று அழைத்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.