தமிழ் சினிமாவில் தன்னுடைய நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்த சிம்ரனை தற்பொழுது வரையிலும் ஓவர் டேக் செய்ய எந்த ஒரு நடிகையினாலும் முடியவில்லை அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை சிம்ரன் 90 காலகட்டத்தில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
அந்த வகையில் குஷ்பூ மற்றும் ஜோதிகா போன்ற முன்னணி நடிகைகளின் வரிசையில் ஒருவராக இருந்து வந்து தமிழ் சினிமாவில் வெற்றி கண்டார். இவர் பிரபுதேவா மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளிவந்த விஐபி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான நிலையில் குறைந்த நாட்களிலேயே சினிமாவில் பிரபலமானவர்.
இவ்வாறு இந்த அளவிற்கு இவர் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் நடனம் மற்றும் கிளாமர் நடிப்புதான். மேலும் கச்சிதமான உடலமைப்புடன் இருந்து வரும் சிம்ரன் தொடையழகி சிம்ரன் என ரசிகர்கள் அழைத்து வந்தார்கள். இவ்வாறு நடனம் ஆடுவதில் வல்லவராக இருந்து வந்த நிலையில் தற்போது வரையிலும் தமிழ் சினிமாவில் இவருடைய இடத்தை எந்த ஒரு நடிகையாலும் பூர்த்தி செய்ய முடியவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் இவருடைய மார்க்கெட் சினிமாவில் குறையுது தொடங்கிய நிலையில் படங்களில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடுவதை தொடங்கினார். அந்த வகையில் ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.
அந்த வகையில் தளபதி விஜய்யின் யூத் படத்தில் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடி அசதி இருந்தார். இவ்வாறு இது குறித்து ரசிகர்கள் கேள்வி கேட்ட பொழுது எனக்கு நடனமாடுவது ரொம்பவும் பிடித்த ஒரு விஷயம் மேலும் நல்ல படங்களை நடனமாட அழைக்கும் பொழுது எனக்கு பிடித்த விஷயத்தை செய்ய நான் தயங்கவில்லை இது என் வாழ்க்கை இதை நான்தான் முடிவு செய்தேன் என சொல்லி இருந்தார்.
இதனை அடுத்து அந்த பாடலுக்கு ஆட வேண்டாம் என்று நிறைய பேர் சொல்லி இருந்தார்கள் எனவும் அதையும் மீறிதான் நான் நடனமாடியிருந்தேன் அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது ஒருவேளை அவர்களது பேச்சை எல்லாம் நான் கேட்டிருந்தார் இந்த அளவிற்கு பிரபலமடைந்திருக்க முடியாது என்று கூறியுள்ளார்.