எனக்கு மட்டும் ஜாமின் கிடைக்கல இதுதான் நடந்திருக்கும்..! சிறையிலிருந்து வெளிவந்த பிறகு வீரவசனம் பேசும் மீரா மிதுன்..!

meeera-mithuna67
meeera-mithuna67

சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை மீரா மிதுன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சிறந்த மாடல் அழகி மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

என்னதான் இவர் பல திரையில் தன்னுடைய முகத்தை காட்டி இருந்தாலும் இவரை பெருமளவு பிரபலப்படுத்தியது எனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மீராமிதுன் ஏகத்திற்கு பிரபலமாகி விட்டார் என்றே கூறலாம்.

அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியேறிய பிறகு பல்வேறு பிரபலங்களையும் தலைவர்களையும் வம்புக்கு இழுத்து இல்லாத பொல்லாத பிரச்சனைகளை உருவாக்கி விட்டார் இதன் காரணமாக அவர் மீது வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்துள்ளார்கள்.

அந்த வகையில் நடிகை மீரா மிதுன் ஜாமீன் வேண்டும் என்று மனு தாக்கல் செய்த நிலையில் சமீபத்தில்தான் இவர் சிறையிலிருந்து வெளி வந்துள்ளார் இவ்வாறு வெளிவந்த உடன் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை மீரா மிதுன் நான் தவறு செய்திருந்தால் என்னை எச்சரித்து இருக்கலாம் ஏனெனில் நான் பல உதவிகளை சமூகத்திற்கு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் முக்கியமான பிரபலங்களில் நானும் ஒருவர் அந்த வகையில் தமிழ்நாட்டுக்கே விருது வாங்கிய பெருமை சேர்த்து கொடுத்தவள் இப்படிப்பட்ட மாடல் அழகி சிறையில் இருக்க வேண்டுமா இதை ஏன் இந்த ஊரு மக்களும் யோசிக்கவில்லை.

ஒருவேளை எனக்கு மட்டும் ஜாமீன் கிடைக்காவிட்டால் அடுத்ததாக நான் உயர் நீதிமன்றத்திற்கு சென்று இருப்பேன் ஏனெனில் நான் எதற்கும் பயப்பட மாட்டேன் என ஒரு பதிவை வெளியிட்டு ரசிகர்களை வந்து மறுபடியும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்.