அரபி குத்து பாடல் பற்றி விஜய் இதை தான் சொன்னார்.? மேடையிலேயே உண்மையை கூறிய சிவகார்த்திகேயன்

arabic-kuthu

தளபதி விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தைப் சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் அதனால இந்த திரைப்படத்தின் பாடல்கள் மாபெரும் வெற்றி பெரும் என பலரும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தநிலையில் திரைப்படத்திலிருந்து அரபி குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது  இந்த பாடல் ரசிகர்களிடம்  பிரபலங்களிடம் மிகப்பெரிய வைரலானது அதுமட்டுமில்லாமல் இந்த அரபி குத்து பாடலுக்கு பல நடிகர் மற்றும் நடிகைகள் ரில் செய்து வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அவ்வாறு பதிவிடும் வீடியோக்கள் ரசிகளிடம் வைரலாகி வருகிறது. அனைத்து பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். இப்படி வைரலாகி வரும் இந்த படத்தின் பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதினார் எனவும் அனிருத் இசையமைத்துள்ளார் எனவும் அனைவருக்கும் தெரியும் ஆனால் இந்த பாடல் குறித்து விஜய் என்ன சொன்னார் என்பது தான் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார் அப்பொழுது அரபி குத்து பாடலை பற்றியும் அனிருத் பற்றியும் விஜய் என்ன கூறினார் என்பதை சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அரபிக் குத்து பாடலை கேட்ட விஜய் அனிருத்தை பாராட்டியதாகவும் பாடல் எழுதிய சிவகார்த்திகேயனிடம் நன்றி நண்பா பாடல் நன்றாக இருக்கிறது கண்டிப்பாக செம ஹிட்டாகும்  என கூறியதாகவும் மேடை ஒன்றில் சிவகார்த்திகேயன் கூறினார்.

அதேபோல் விஜய் கணித்தது போலவே அரபி குத்து பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.

beast-1
beast-1