காமெடி நடிகர் மனோபாலாவின் உயிரை பறித்தது இதுதான்.! பயில்வான் ரங்கநாதன் சொன்ன அதிர்ச்சி தகவல்

manobala
manobala

கடந்த சில வருடங்களாக திரையுலகில் வெற்றி கண்ட பல இயக்குனர்கள் நடிகர்கள் காமெடியன் என பலரும் மரணமடைந்து வருகின்றனர் அந்த வகையில் விவேக் மயில்சாமியை தொடர்ந்து மனோபாலா இயற்கை எழுதியது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இவர் திரை உலகில் முதலில் உதவி இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

பிறகு 1994 ஆம் ஆண்டு தாய் மாமன் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து திரை உலகில் காமெடியனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இப்படிப்பட்ட மனோபாலா கடந்த சில வருடங்களாக கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

15 நாட்களுக்கு முன்பு தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மரணமடைந்தார் இந்த செய்தி திரை உலகில் இருக்கும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது ஒரு சிலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர் வர முடியாதவர்கள் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் மனோபாலா இறந்தது குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது மோகன் ரஜினி விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் மனோபாலா அவர் இயக்குனராக அறிமுகமான அனைத்து படங்களிலும் நான் நடித்துள்ளேன் அன்பாக பேசுவார் எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வருவார்.

படம் இயக்குவதை நிறுத்திய பின் சினிமாவில் நடிகர் பல இயக்குனர்களும் இவரை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டனர் எனக்கு தெரிந்து கடந்த 30 வருடங்களாக அவருக்கு மது பழக்கம் இருந்தது அதுதான் அவரின் மரணத்திற்கு காரணம் கல்லீரல் கெட்டு அவர் மரணம் அடைந்துள்ளார் மதுவை பற்றி எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும் குடி குடியை கெடுக்கும் என எல்லோரும் சொன்னாலும் மக்கள் கேட்பது இல்லை என பயில்வான் ரங்கநாதன் கூறினார்.