Surya : தமிழ் சினிமா உலகம் பல வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெரிதும் எதிர்பார்க்கக் கூடிய திரைப்படம் “கங்குவா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழில் நுட்பத்தால் உருவாகி வருகிறது.
படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் யுவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ளது. இதில் சூர்யா 10 – திற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பட்டாணி கதாநாயகியாக நடித்து உள்ளார். மேலும் யோகி பாபு, கோவை சரளா உட்பட்ட பலர் நடிக்கின்றனர். இந்த கங்குவா திரைப்படம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது என்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு gilmpse வீடியோ வெளியானது.
அதுவே பெரிய அளவில் ரசிகர்களுக்கு தீனி போட்டது இந்த நிலையில் கங்குவா படத்தின் தலைப்பு என்ன பொருள் என்பதை இயக்குனர் சிவா வெளிப்படையாக கூறியுள்ளார் கங்குவா என்றால் நெருப்பு மகன் என்று அர்த்தம். இது Ganguva அல்ல.. Kanguva என்று தமிழில் உச்சரிக்க வேண்டும் கங்குவா என்றால் நெருப்பு என்று அர்த்தம்.
மேலும் பேசிய அவர் படப்பிடிப்பிற்காக ஒரு சில இடங்களை அடைய மலை ஏற்றம் போல் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும் அது எங்களுக்கு கடினமாக தோன்றவில்லை ஏனென்றால் அந்த நாளின் முடிவில் எடுக்கப்பட்ட காட்சிகள் பார்த்தபோது அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது இந்த படத்திற்காக நடிகர் சூர்யா 100% ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார் என்று கூறினார்.