விஜய்யிடம் நான் பார்த்து வியந்தது இதுதான் – வெளிப்படையாக பேசிய நடிகர் விக்ரம்.!

vijay
vijay

நடிகர் விக்ரம் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக ஓடிக்கொண்டிருக்கிறார் இருப்பினும் இவர் அண்மைக்காலமாக நடித்த படங்கள்  தோல்வி படங்களாக அமைந்தன அதிலிருந்து மீண்டு வர நடிகர் சியான் விக்ரம் சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து தற்போது நடித்துள்ளார் அந்த வகையில் விக்ரம் கையில் கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் இருந்தன.

அதில் முதலாவதாக அஜய் ஞானமுத்து இயக்கத்தில்  விக்ரம் நடிப்பில் உருவான  கோப்ரா படம் முதலாவதாக ரிலீஸ் ஆகி உள்ளது படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரமுடன் கைகோர்த்து மியா ஜார்ஜ், ஸ்ரீநிதி ஷெட்டி , இர்பான் பதான் ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார்,  பாபு ஆண்டனி.

மற்றும் கனிகா, ரவினா ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், ஆனந்தராஜ், பூவையார் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடித்து அசத்தி உள்ளார். படம் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகர் விக்ரமிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக விஜய் குறித்து அவர் பேசினார் அதில் அவர் சொன்னது விஜய் எந்த ஒரு சூழ்நிலையிலும் பதட்டப்படாமல்   பொறுமையாக சூழ்நிலையை  கையாளுவர். மேலும் அவர் ஒரு நல்ல நடிகர் அவரது டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்..

மற்ற நடிகர்கள் போல விஜய்  ரிகசல் எல்லாம் பண்ண மாட்டார் அப்படியே பார்த்துவிட்டு வந்து நடனமாடுவார். அதே பிரமாதமாக இருக்கும் என கூறினார். விஜய் பற்றி விக்ரம் இப்படி புகழ்ந்து பேசியது தளபதி ரசிகர்களை தற்போது கொண்டாட வைத்துள்ளது மேலும் தளபதி ரசிகர்கள் இந்த செய்தியை இணையதள பக்கத்தில் பரப்பி வைரலாக்கி வருகின்றனர்.