விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது வீட்டினுள் நாம் எதிர்பார்க்காத பல்வேறு சம்பவங்கள் நடந்து அரங்கேறுகின்றன ஆம் காலையில் அடித்துக் கொள்வதும் மாலையில் இணைந்து ஒன்றாகி பேசிக்கொள்வதும் ரசிகர்களுக்கு தற்போது புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது இதனால் யார் சிறந்த போட்டியாளர்கள் என்பது கணிக்க முடியாமல் இருந்து வருகிறது அண்மையில் இமான் அண்ணாச்சி குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேறினார்.
இவர் பேசும் நெல்லை தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தது இது போதாத குறைக்கு காமெடியாகவும் பேசியே சிறப்பாக பயணித்துக் கொண்டு இருந்தாலும் எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார்.ஆனால் இப்பொழுது மக்களின் கருத்து என்னவென்றால் பிக்பாஸ் வீட்டில் அண்ணாச்சி இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் அந்த வாரம் அபினை தான் போயிருக்க வேண்டும் என புலம்புகின்றனர்.
எது எப்படியோ கமலஹாசன் அவரை வெளியேற்றும் பொழுது நான் உங்களுக்கு நடிக்கும் வாய்ப்பை கொடுக்கிறேன் என கூறியது ஒரு நல்ல செய்தியாக அமைந்தது. வெளியே வந்த அண்ணாச்சி பல்வேறு பேட்டி கொடுத்து வருகிறார் அதில் ஒன்றில் இவர் பேட்டி கொடுத்தது பாவனி,பிரியங்கா குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். முதலில் பேசினார்பவானி அந்த பொண்ணு எப்படி எடுத்துக் கொண்டது என்று யாருக்கும் தெரியாது நான் பவானி, அபினை ரெண்டு பேரையும் கூப்பிட்டு அந்த விஷயத்தை இத்தோட விட்டுடுங்க..
அவங்க அவங்க வேலைய பாருங்க எல்லோரும் குடும்பம் இருக்கிறது அதை பார்த்து விளையாடுங்கள் என சொன்னேன். பிறகு சரி என்று நினைத்தேன் பார்த்தால் இவ்வளவு பிரச்சினையை கொண்டு வந்து இருக்கிறார்கள் கடைசியில் அபிநய் தான் பாவம் நீ வேண்டாம் என்று சொல்ல பின்னாடி பின்னாடி துரத்தி வந்தான் என்று சொல்கிறார்கள் ஆனால் அந்த அளவிற்கு அவர் போனான் என்று எனக்கு தெரியவில்லை. எது எப்படியோ அந்த பஞ்சாயத்து முடிந்துவிட்டது.
இப்ப பாவனியிடம் அமீர் தான் பேசி தனியாக வருகிறான் அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் லிமிட் ஆகிய இரு பழக சொல்லி உள்ளேன். ஆனால் அவனும் அதே மாதிரி தான் பண்ணிக்கிட்டு இருக்கான் இது எங்க போய் முடியும்ன்னு தெரியல.. பிரியங்காவும் ஏதாவது ஒன்னு சொல்ல வந்தா அதை வேற மாதிரி புரிஞ்சிகிட்டு டக்கு டக்குனு பேசி மத்தவங்களை காயப்படுத்துவா..எங்கள பார்த்து நீங்க எல்லாம் குரு பண்ணி இருக்கீங்க சொல்லுவார் அதற்கு நான் கமல் சாரிடம் அவர்கள் எங்களைப் பார்த்து பயந்து விட்டாரே என்று நான் சொன்னேன் அதற்கு பிரியங்கா நாங்களா நான் பயந்துட்டேன் பயந்துட்டேன் என சொல்வார்.
அதற்கு நானும் பயந்து விட்டாய் இதற்கு ஏன் பேசுகிறாய் என்று சொல்வேன். பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் 106 நாளிலிருந்து டைட்டில் வின்னர் பெற இப்படி பண்ணுகிறாய் என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை அதேபோல்தான் வெளியேறும்போது பிரியங்க என் காலில் விழுந்த போது என் மனதில் தோன்றியது உலக மகா நடிப்புடா என நினைத்தேன்.