தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சினிமா உலகில் ஆரம்பத்தில் வருகின்ற வாய்ப்புகளில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி நடித்திருந்தாலும், போகப்போக சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அதன் விளைவாகவே இவருக்கு தமிழ் சினிமாவுலகில் டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்க்கும் பொறுப்பை பெற்றார்.
அந்த வகையில் சூர்யா, தனுஷ், விஜய் போன்ற டாப் நடிகர்களுடன் பயணித்துக் கொண்டு இருந்ததால் இவருக்கு ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் தெலுங்கில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதும் நடிகர் நாக சைதன்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து வாழ்க்கையை வாழ ஆரம்பத்தினார்.
மேலும் ரசிகர்களால் சிறப்பான ஜோடியாக கருதப்பட்டு சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தன திடீரென நான்கு வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். உடனடியாக நடிகை சமந்தா தனது எண்ணங்களை மாற்றி அமைத்துக் கொண்டு சினிமா உலகில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார்.
அண்மையில் கூட புஷ்பா திரைப்படத்தில் அரைகுறையான அழகை போட்டுக்கொண்டு ஒ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் அதை தொடர்ந்து இவரது கையில் சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் இருக்கின்றன. இவரது நடிப்பில் காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படம் வெளிவர ரெடியாக இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் நாக சைதன்யா குறித்து பேசியுள்ளார் அந்தப் பேட்டியில் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டு அப்பொழுது நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் என கேட்டனர் அதற்கு சமந்தா அவரது முதல் மனைவி pillow என குறிப்பிட்டார். நான் அவருக்கு முத்தம் கொடுக்கும் பொழுது கூட அவரது அருகில் அந்த pillow இருக்கும் என கூறினார்