மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு கமல் சொன்னது இதுதான்..! உண்மையை உடைத்து பேசிய மாரி செல்வராஜ்

kamal
kamal

பரியேறும் பெருமாள் , கர்ணன் போன்ற படங்களை எடுத்து வெற்றி கண்ட மாரி செல்வராஜ் உதயநிதியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து மாமன்னன் என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் ஜூன் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் கைகோர்த்து வடிவேலு, பகத் பாஸில்..

கீர்த்தி சுரேஷ், ரவீனா ரவி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் தற்பொழுது மக்கள் போட்டி போட்டு கொண்டு பார்த்து வருகின்றனர் இதுவரை மட்டுமே 17 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு கமலஹாசன் என்ன சொன்னார் என்பதை அண்மையில் பேட்டி ஒன்றில் மாரி செல்வராஜ் வெளிப்படையாக பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொன்னது கமல் சாருக்கு படத்தை போட்டு காட்டினோம் அவர் இடைவெளி என்று கூட பார்க்காமல் படத்தை முழுவதுமாக பார்த்து முடித்தார்.

பிறகு படம் எனக்கு பிடித்திருக்கிறது எனக் கூறினார் மேலும் “தலைவன் இருக்கிறான்” படத்தில் வடிவேலுவை இப்படி காட்ட நினைத்தேன் நீங்கள் அதற்கு முன்பாகவே காட்டி விட்டீர்கள்.. உங்களுக்கு இப்படி தோன்றியதற்கு பாராட்டுக்கள் என கூறினாராம் இதனை மாரி செல்வராஜ் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் கமல் போல படத்தை பார்த்த பலரும் இந்த படத்தை பாராட்டி தள்ளுவதோடு மட்டுமில்லாமல் வடிவேலு நடிப்பையும் பெரிதாக பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.