தமிழ் சினிமாவில் இயக்குனர் அட்லி இயக்கிய பிகில் என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் காயத்ரி ரெட்டி. இவ்வாறு இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய் நடித்தது மட்டுமில்லாமல் நாயகியாக நயன்தாரா நடித்து இருப்பார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் பல நடிகைகள் அறிமுகமானது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை காயத்ரி ரெட்டி கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டியில் 10-வது இடத்தை பெற்று இருந்தார் அது மட்டுமில்லாமல் இவர் தன்னுடைய 18 வயதில் சிறந்த மாடல் அழகி என பெயர் எடுத்தவர். மேலும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டார்.
இவ்வாறு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது மட்டுமில்லாமல் சமீபத்தில் நமது நடிகை காயத்ரிக்கு வீட்டில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது இதுகுறித்து நடிகை காயத்ரியிடம் பல சேனல்கள் பேட்டி எடுத்துள்ளார்கள்.
அதில் அவர் கூறியது என்னவென்றால் தற்போதைய எனக்கு இருபத்தி ஆறு வயது முடியப்போகிறது இந்நிலையில் எனக்கு வீட்டில் திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் அதுமட்டுமில்லாமல் எனக்கு லவ் செட் ஆகாது ஆகையால் நான் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டேன்.
பொதுவாக பொண்ணு பார்க்க வருபவர்கள் சினிமாவில் நடிக்கிற பெண்ணை வேண்டாம் என்று தான் சொல்வார்கள் ஆனால் இவர்கள் காயத்ரி யாரு..? அவருடைய குணம் என்ன..? என்பதை மட்டுமே பார்த்தார்கள் மேலும் இரண்டு பேரும் நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டோம் அதிக அளவு போனில் பேசியது மட்டும் இல்லாமல் தற்போது எங்களுடைய திருமணம் லவ் அண்ட் அரேன்ச் மேரேஜ் ஆகிவிட்டது.
மேலும் என்னுடைய வருங்கால கணவர் வெளிநாட்டில் கன்ஸ்ட்ரக்சன் வொர்க் செய்து கொண்டு வருகிறார் இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு ஆக நானும் அவருடன் வெளிநாட்டுக்கு சென்று விடுவேன் ஆனால் கொஞ்ச காலம் கழித்த பிறகு நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவேன் என்று காயத்ரி ரெட்டி ஓபனாக பேசியுள்ளார்.