நடிப்பிற்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் சமீபகாலமாக இவர் திரையுலகம் பக்கம் காணப்படவில்லை இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்து காரணம் சினிமாவையும் தாண்டி அரசியல் பக்கம் சென்றிருந்தார் இப்போ ஒரே சமயத்தில் அரசியல் சினிமா இவை இரண்டையும் கவனிக்கத் தொடங்கி உள்ளார்.
அதன் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தில் கமலுக்கு ஏத்த மாதிரியான வில்லன்களை படக்குழு தேர்வுசெய்து உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் சேதுபதி பகத் பாசில் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இவர்களை தொடர்ந்து பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது விக்ரம் படத்திற்காக கமல் தொடர்ந்து படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பிக்பாஸ், பிசினஸ், அரசியல் என பயணித்து வருகிறார் இவர் இப்படி பயணித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத கொரோனா தொற்று ஏற்பட்டது.
அதன்பின் சிறிது காலம் சூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருந்தாரோ ஒருவழியாக தற்போது குணமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் வெகுவரைவிலேயே விக்ரம் சூட்டிங்கில் கலந்துகொண்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு அசத்துவார் என தெரிய வந்துள்ளது இந்த நிலையில் விஜய் டிவி பிரபலம் மைனா நந்தினி விக்ரம் திரைப்படத்தில் நடித்தது குறித்து சில செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறவது : விஜய் சேதுபதியுடன் நடித்தது சந்தோஷமாக இருப்பதாகவும் சின்னத்திரை தான் இது போன்ற வாய்ப்புகள் அமைய காரணமாக இருந்ததாகவும் தெரிவித்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி என்னுடன் சேர்த்து இரண்டு நடிகைகள் ஜோடியாக நடித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் ஷிவானி மற்றும் மகேஸ்வரியும் விஜய்சதுபதியுடன் நடித்துள்ளனராம்.