தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஏனென்றால் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக மற்ற நடிகர்களின் படங்களை விடவும் மாபெரும் வெற்றியை பெற்று விடுகிறது.
அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தி என்று அனைவராலும் கொண்டாட படுகிறார்.சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய் சினிமாவிற்கு வாரிசு நடிகராக அறிமுகம் ஆனாலும் பெரிதும் தோல்வியை சந்தித்து அதன் பிறகு தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் பல வெற்றி படங்களை தனது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
இந்நிலையில் தளபதி விஜய் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக வந்து ரசிகர்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு சில வீடியோக்கள் இணையதளத்தில் பெரிதளவில் பாராட்டப்பட்டது.
அந்த வகையில் தற்பொழுது தளபதி விஜய் எந்த பேட்டியிலும் கலந்து கொள்ளாமல் முற்றிலும் அதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் தளபதி விஜய் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு கலந்துகொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் கோபிநாத் விஜயிடம் பல கேள்விகளை கேட்பார் அதற்கு தளபதி விஜய் நான் சினிமாவிற்கும் வரும்பொழுது பெரிதாக எதிர்பார்த்து வரவில்லை ஏனென்றால் நான் அவ்வளவு அழகும் கிடையாது என சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி ஆகிவருகிறது.இதோ அந்த வீடியோ.
I don't know why I got tears in my eyes when I saw this video 😭🤧
Nee Eppayume Azhagu Dha Thalaivaa ❤️🤤#Master @actorvijay #Thalapathy65 pic.twitter.com/7ezOahnibl
— Jiven ツ (@VijayGeek) May 8, 2021