திரை உலகில் இளம் வயதிலேயே தனது சினிமா பயணத்தை மேற்கொண்டு தற்போது பல்வேறு சிறப்பான படங்களை கைப்பற்றி நடித்து வருபவர் மாஸ்டர் மகேந்திரன்.
இவர் மூன்று வயதில் இருந்தே தற்போது வரையிலும் சினிமா உலகில் வெற்றிநடை கொண்டு வருகிறார் இவர் இதுவரையிலும் 100- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் தென்னிந்திய திரை உலகில் தாண்டியும் பல்வேறு மொழிகளில் நடித்து பல விருதுகளையும் தன்வசப்படுத்தி உள்ளார்.
இருப்பினும் தமிழ் சினிமாவில் இவர் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் பல ஆண்டுகளாகப் போராடி வந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் அதற்கான அங்கீகாரத்தை கொடுத்து அடுத்த இடத்தை நோக்கி பயணிக்க நல்லதொரு வாய்ப்பை கொடுத்துள்ளது.
இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படம் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார் மாஸ்டர் மகேந்திரன் அவர் கூறியது.ம் நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் விஜய்யை போன் யூஸ் பண்ணி பார்த்ததே கிடையாது மேலும் அவர் நடிக்கும் வரும்போதும் சரி அவரது கையில் போன் இருக்காது என கூறினார்.
மேலும் அவர் அமைதியானவர் யாரிடத்திலும் அவ்வளவு சீக்கிரம் பேச மாட்டார் அப்படி பேச ஆரம்பித்தால் எல்லோரையும் செம்மையாக கலாய்ப்பதும் உரிமையோடு தோளில் கைபோட்டு அவர் பழகும் விதம் சூப்பராக இருக்கும் என கூறினார்.