வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் வெற்றி நடை கண்டு வருபவர் நடிகர் அஸ்வின். ஒரு நிகழ்ச்சி ஓவர் நைட்டில் இவரது தலையெழுத்தையே மாற்றி விட்டது என்று தான் கூற வேண்டும் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் மக்களை கவர்ந்தது என்றால் அது குக் வித் கோமாளி தான்.
இது தற்போது சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது இதன் இரண்டாவது சீசனில் அஷ்வின் கலந்துகொண்டார் இதன் மூலம் தனக்கான ரசிகர்களை மிகப்பெரிய அளவில் பெருக்கி கொண்டார். தற்பொழுது வெள்ளித்திரையில் பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து உள்ளன அந்த வகையில் அஸ்வின், ஹரிஹரன் எழுதி இயக்கும் என்ன சொல்லப்போகிறார் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் அஸ்வின் தான் கடந்து வந்த பாதை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வலியுடன் கூறியுள்ளார் அவர் கூறியது. என் உடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடித்தவர்கள் பல்வேறு படங்களில் நடிப்பது எனக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது அவர்களைப்போலவே நானும் பல்வேறு திரைப்படங்களில் நடிக்கிறேன் அதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது.
மேலும் அவர் கூறியது என் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு செல்ல பணம் தேவை என்பதை அப்பொழுதே நான் உணர்ந்து விட்டேன் என்ன செய்வது என்று எனக்கு தெரியல ஒரு கட்டத்தில் நான் மிகவும் கஷ்டமான நிலைமைக்கு சென்று விட்டேன்.
இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி போராடுவது என்ற எண்ணம் வந்தது ஆனால் நிச்சயம் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்கின்ற மனதில் இருந்தது மன உறுதி மட்டும் என்கிட்ட இருந்தது அந்த வெறி தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தி உள்ளது என்று நான் நினைக்கிறேன் என கூறினார்.