முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் விருமன். இந்த படம் நாளை கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருந்து வந்துள்ளன.
இந்த படத்தின் டிரைலரை வைத்து பார்த்தாலே தெரிகிறது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் சென்டிமென்ட் காமெடி கலந்த திரைப்படமாக இருக்கும் என்று நிச்சயம் கொம்பன் படம் போல இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தேடி வருகிறது. அதேசமயம் வசூலிலும் பட்டையை கிளப்பும் என சொல்லப்படுகிறது.
விருமன் படத்தில் கார்த்தி உடன் பணியாற்றிய நடிகர் நடிகைகள் அனைவரும் சொல்லுவது இந்த படத்திற்காக நிச்சயம் கார்த்திக்கு விருது கிடைக்கும் என்கின்றனர். அப்படி என்றால் இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் இருக்கும் என தெரிய வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க.. மறுபக்கம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மதுரை வீரன் பாடல் தற்பொழுது பெரிய அளவில் பேசப்படுகிறது.
காரணம் இந்த பாடலை முதலில் நாட்டுப்புற கலைஞர் ராஜேஸ்வரி தான் பாடினார் என்றும் அதன் பிறகு தான் அதிதி பாடினார் என்றும் பேசப்படுகிறது இதற்கு ராஜேஸ்வரி பதில் அளித்தது. யாரும் அப்படி சொல்லாதீங்க.. சினிமா என்றாலே அப்படித்தான் இருக்கும் என கூறி முடித்தார்.
அதிதி தரப்பில் இருந்து தற்போது இதற்கும் பதில் கிடைத்துள்ளது அதாவது விருமன் படத்தில் இடம் பெற்றுள்ள மதுரை வீரன் பாடலை முதலில் அதிதி தான் பாடினார் என்றும் அதன் பிறகு தான் ராஜேஸ்வரி பாடினாராம். கடைசியாக இந்த இரண்டில் எது பிடித்திருந்ததோ அதில் ஒன்றை தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஓகே செய்து பினிஷ் பண்ணினார் என கிசுகிசுக்கப்படுகிறது.