தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள், அந்த வகையில் பல தொகுப்பாளினிகள் நடிகைகளை விட அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். அந்த லிஸ்டில் vj ரம்யாவும் ஒருவர்.
இவர் முதன்முதலில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் அதனைத் தொடர்ந்து உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நம்ம வீட்டு கல்யாணம் கெடி பாய்ஸ் கில்லடி கேர்ல்ஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
மேலும் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் தமிழில் 2007 ஆம் ஆண்டு மொழி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதேபோல் அஜித்தின் மங்காத்தா படத்திலும் ரிப்போர்ட்டராக நடித்து மிரட்டினார். அதேபோல் ஆடை திரைப்படத்திலும் அமலாபாலுடன் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.
கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம். அதிலும் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அடிக்கடி ஜிம் ஒர்க் அவுட் வீடியோவை வெளியிடுவார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் தமிழ் புத்தாண்டுக்கு பல பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் புகைப்படத்தையும் வெளியிட்டு வாழ்த்துக் கூறி வருகிறார்கள் அந்த வகையில் தொகுப்பாளினி ரம்யா புடவை கட்டிக்கொண்டு தலை நிறைய மல்லிகை பூவை வைத்துகொண்டு புன்னகை சிரிப்புடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடம் லைக்ஸ் பெற்று வருகிறது.