தமிழ்நாட்டில் இன்று உச்ச நட்சத்திரமாக வலம் வருவர் தளபதி விஜய். இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் விஜய் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது அதனை தொடர்ந்து மற்றொரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுக்க..
இளம் இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறதாம் படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது இதில் விஜய் உடன் இணைந்து மிஸ்கின்..
அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், த்ரிஷா, பிக் பாஸ் ஜனனி மற்றும் பல திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர். லியோ படம் தீபாவளிக்கு முன்னரே வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் விஜய் கதை கேட்டு ஓகே சொல்லி இருக்கிறார்.
இந்த படம் மிகப்பெரிய ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு விஜயின் சம்பளம் 200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்ததாக வெற்றி இயக்குனர் வெற்றிமாறனுடன் தளபதி விஜய் முதல்முறையாக கைகோர்க்க இருக்கிறார்.
அந்த படம் மிகப் பிரமாண்டமான படமாக இருக்கும் என்றும் இதுதான் விஜய்க்கு கடைசி படமாக இருக்கும் என பலரும் கூறுகின்றனர் அதன் பின் விஜய் அரசியலில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..