தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பியது இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதன்முறையாக இணைந்து தனது 66 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படம் சற்று வித்தியாசமான குடும்பங்கள் நிறைந்த கதையாக இருக்கும் என தெரியவருகிறது ஏனென்றால் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ரஷ்மிகா மந்தனா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
தளபதி 66 திரைப்படம் அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே படம் வெளியாகும் என படக்குழு அதிரடியாக கூறி உள்ளது இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்யுடன் 2வது முறையாக கூட்டணி அமைத்து தனது 67வது திரைப்படத்தில் நடிக்க விஜய் ஆர்வம் காட்டியுள்ளார் இந்த படத்திற்கான கதையை ஏற்கனவே உருவாக்கியுள்ளாராம் இயக்குனர்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக தளபதி 67 உருவாக்கும் என கூறப்படுகிறது தளபதி விஜய்யும் அண்மை காலமாக ஆக்சன் படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவர் வில்லன் ரோலில் நடிக்க தான் ரொம்ப ஆர்வம் அதை பல முறை இயக்குனர்களிடம் கூறியுள்ளாராம்.
அதை மனதில் வைத்தே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்க்காக பார்த்து பார்த்து ஒரு கதையை எழுதி உள்ளார் அந்தப் படம் முற்றிலும் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகும் அதில் தான் விஜய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.