சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் ஆரம்பத்தில் பல்வேறு பிரச்சனைகளையும், இன்னல்களையும் சந்தித்து தான் படிப்படியாக இந்த இடத்தில் இருக்கிறார் இவரைப்போலவே பல்வேறு அவமானங்களையும் நிஜ வாழ்க்கையில் சந்தித்த தற்பொழுது உயர்ந்துள்ளார் தளபதி விஜய்.
இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக இருக்கின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் படங்கள் என்று வந்துவிட்டால் எதிரெதிராக மோதிக்கொள்வது காலம் காலமாக இருந்து வருகின்றன. சினிமாவில் இப்படி இருந்தாலும் இருவருமே நிஜத்தில் நல்ல நண்பர்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறனர்.
அஜித்-விஜயையும் தாண்டி அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ரொம்பவும் பிடித்து போனவர். சமீபத்தில் பேசிய எஸ். ஏ. சந்திரசேகர் அஜித் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் என பல மேடைகளில் புகழ்ந்து பேசியுள்ளார் ஏன் விசுவாசம் திரைப்படத்தில் கூட அஜித்தின் நடிப்பை பார்த்து கண் கலங்கி போனார்.
இப்படி இருக்கின்ற நிலையில் எஸ் ஏ சந்திரசேகருக்கு மிகவும் பிடித்துப் போன அஜித் படம் எது என கேட்டுள்ளனர் அதற்கு பதிலளித்த எஸ் ஏ சந்திரசேகர் இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் திரைப்படம் சிட்டிசன் இந்த திரைப்படம் தான் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் என கூறியுள்ளார்.
இந்த படத்தில் பல திருப்பங்கள் மற்றும் சிறப்பாக இருந்த காரணத்தினால் எஸ். ஏ. சந்திரசேகருக்கு மிகவும் பிடித்த படமாக சிட்டிசன் படம் இருந்ததாம். இவ்வாறு விஜய்யின் தந்தை பேசியது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.