தளபதி விஜய் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கின்றன இதனால் அடுத்த படம் மிகப்பெரிய ஒரு படமாக கொடுக்க விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் படமாக உருவாகி வருவதாக படக்குழு ஏற்கனவே ஒத்துக் கொண்டது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இறுதி கட்டப்பட பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லியோ படத்தில் விஜயுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, ப்ரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
லியோ படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடிதாலும் யார் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை தெரியாமலேயே இருந்து வந்துள்ளது நிலையில் லியோ படத்தில் விஜய்க்கு அப்பாவாக ஒருவர் நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது ஆம் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தான் விஜய்க்கு அப்பாவாக நடிக்கிறார் எனவும்..
இவருடைய கதாபாத்திரங்கள் தான் காஷ்மீரில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜய் போல சஞ்சய் தத்துக்கும் இந்த படத்தில் பல மாஸ் சீன்கள் இருக்கும் மேலும் செண்டிமெண்ட்ஸ் இருக்கும் எனவும் ரசிகர்கள் இப்போது கனவு கோட்டை கட்ட ஆரம்பித்துள்ளனர். இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் காற்று தீ போல பரவி வருகிறது.