ரஜினி நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் பொருந்திய படமாக இருந்ததால் அப்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு பிரமாண்டமான வசூலை அள்ளியது.
இந்த படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டனர். இயக்குனர் பி வாசுவும் அதற்கு ரெடியா இருந்தார் ஆனால் அப்பொழுது அது கைவிடப்பட்டது ஆனால் இயக்குனர் பி வாசு இரண்டாவது பாகத்தை எடுத்தே ஆக வேண்டுமென ஒரு முடிவோடு இருந்தார். ஒரு வழியாக கதையை உறுதி செய்து இப்பொழுது நடிகர் ராகவா லாரன்ஸுக்கு கதையை சொல்லி ஒப்பந்தமாகி படத்தின் ஷூட்டிங் கூட விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.
சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் கைகோர்த்து லட்சுமிமேனன், வடிவேலு, ராதிகா மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படமும் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படம் எடுக்கப்பட்டு வருகிறது. சந்திரமுகி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என தெரிய வருகிறது. இந்த படத்தில் வடிவேலு எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. வடிவேலு சந்திரமுகி படத்தில் நடித்தது போலவே முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் தான் மீண்டும் நடிப்பதாக கூறப்படுகிறது அதோடு மட்டுமல்லாமல் முதல் பாகத்தை மிஞ்சும் அளவிற்கு அதிரடியான காமெடி காட்சிகளில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ராகவா லாரன்ஸ் வடிவேலு காமெடி காட்சிகள் பெரிய அளவில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே சிவலிங்கா திரைப்படத்தில் வடிவேலு ராகவா லாரன்ஸ் காமெடி பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. அதேபோல சந்திரமுகி படத்திலும் இவர்களது காமெடி பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.