தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். அப்படி குழந்தை நட்ச்சதிறமாக சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை அனிகா சுரேந்தர். இவர் சோட்ட மும்பை என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழில் நடிகர் அஜித் குமார் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் அனிகா சுரேந்திரன். இந்த படத்தில் திரிஷாவிற்கு மகளாக நடித்திருப்பார். அது தொடர்ந்து நடிகை அனிகா சுரேந்தர் மிருதன், தி கிரேட் பாதர், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடிதான், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் அனிகா சுரேந்தர் மீண்டும் நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் என்ற திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுல இருந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அனிகா சுரேந்தர் ரசிகர்களால் செல்லமாக குட்டி நயன்தாரா என்று அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை அனிகா சுரேந்திரன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மற்ற நடிகைகளை போலவே தானும் சினிமாவில் ஒரு நடிகையாக வேண்டும் என்று அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை அனிகா தற்போது தீபாவளி ஸ்பெஷல் ஆக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற சுடிதாரில் ரசிகர்களை மயக்கும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.